top of page
mediatalks001

'இராக்கதன்' - விமர்சனம் !


பள்ளி பருவத்திலிருந்தே காயத்ரி ரேமா , விக்னேஷ் பாஸ்கர் , தினேஷ் கலைசெல்வன் மூவரும் சிறு வயது நண்பர்களாக இருக்கின்றனர் .


இதில் காயத்ரி ரேமாவும் , விக்னேஷ் பாஸ்கரும் காதலிக்கிறார்கள்.


விக்னேஷ் பாஸ்கர் மாடலாக வேண்டும் என்பதே கனவு லட்சியமாக இருக்கிறார். இதனிடையே மாடலிங் பயிற்சி அளிக்கும் ஏஜேன்சியில் அழைப்பு வர மகிழ்ச்சியாக சென்னைக்கு பயணமாகிறார்.அங்கே ஏஜென்சி மேனேஜர் ரியாஸ் கான் விக்னேஷ் பாஸ்கரை மாடலிங் பயிற்சி அளித்து அவரை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.


அதன் பின்னர் மாடலிங் துறையில் நுழைய பல சிக்கல்களையும், எதிர்ப்புகளையும், சமரசங்களும் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விக்னேஷ் பாஸ்கர் .


சென்னையில் உள்ள மாடலிங் நண்பனை பார்ப்பதற்காக தினேஷ் கலைசெல்வனும் காயத்ரி ரேமாவும் ஏஜென்சிக்கு வருகின்றனர்.


ஆனால் விக்னேஷ் பாஸ்கரை பார்க்க முடியாமல் தவிக்கும் காயத்ரி ரேமாவை ஹோட்டல் அறைக்கு அனுப்பி விட்டு தினேஷ் கலைசெல்வன் நண்பனை பார்க்க உள்ளே செல்கிறார்.

மறு நாள் விக்னேஷ் பாஸ்கரும் ரியாஸ் கானும் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் தினேஷ் கலைசெல்வன் . அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.


இந்த கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் வம்சி கிருஷ்ணா நியமிக்கப்படுகிறார்.


இவரின் தீவிர விசாரணையில் ரியாஸ் கானை பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது . மாடலிங் என்ற பெயரில் அங்கு என்ன நடந்தது? எதற்காக விக்னேஷ் பாஸ்கர் கொலை செய்யப்பட்டார்? ரியாஸ் கான் யார் அவர் செய்யும் தொழில் என்ன ? விக்னேஷ் பாஸ்கரை கொலை செய்தது யார் ?ரியாஸ் கான் கொலையானதன் மர்மம் என்ன ? என்பதை சொல்லும் படம் தான் 'இராக்கதன்'


வம்சி கிருஷ்ணா இன்ஸ்பெக்டர் அஜ்மலாகவும், விக்னேஷ் பாஸ்கர் பாதிக்கப்பட்ட மாடல் அர்ஜூனாகவும் , காயத்ரி ரேமா காதலி அனன்யாவாகவும் ,தினேஷ் கலைசெல்வன் அவரது நண்பர் அலெக்ஸாகவும், ரியாஸ் கான் பெண்மைத்தனம் கொண்ட வில்லன் ஆஸ்டினாகவும், நிழல்கள் ரவி, மாடலிங் தொழிலதிபராக சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .


ஏ பிரவீன் குமார் இசையும் மானஸ் பாபு ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


புதிய கதை களமாக ஆண் விபசாரத்தை மையமாக வைத்து வித்தியாசமாக கவர்ச்சி துறையில் ஆர்வமுள்ள ஆண் மாடல்கள் எதிர்கொள்ளும் விபச்சாரம், போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை இதுவரை யாரும் சொல்லாத கதையாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன்.



ரேட்டிங் ; 2. 5 / 5



Comentarios


bottom of page