top of page

'காக்கி சர்க்கஸ்' - இணைய த்தொடர் விமர்சனம்

  • mediatalks001
  • 4 hours ago
  • 2 min read


ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர்  தயாரிப்பில் இயக்குநர் அமீன் பாரிப், இயக்கத்தில்   ’காக்கி சர்க்கஸ்’  ஏப்ரல் 10 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது,


முனீஷ்காந்த் , சுபாஷ் செல்வம் ,ராஜேஷ் மாதவன், கௌதமி ,வின்சு  ராச்சே , சாவித்திரி ,அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உஷர்,விக்னேஷ்வர், ஆகியோர் நடித்துள்ளனர் .


முனீஷ்காந்த் கண்ணகியாள்புரம் சிறைச்சாலையில் ஜெயில் வார்டனாக இருக்கிறார். ஒரு எழுத்தாளாரான இவர் சிறைச்சாலையில் ஒரு நூலகம் வைத்திருக்கிறார்.


குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அங்குள்ள கைதிகள் அனைவருக்கும் தான் எழுதிய புத்தகங்களை கொடுத்து கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்கிறார். இவருடன் காவலராக சுபாஷ் செல்வம் பணியாற்றுகிறார்.


அந்த சிறைச்சாலையில் ஒரு கண்ணகி அம்மன் சிலையுடன் கோவில் இருக்கிறது, அதன் கீழே ஒரு உண்டியலும் இருக்கிறது.


சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் அந்த கண்ணகி அம்மன் உண்டியலில் காசு போட வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த உண்டியல் நிறைந்ததும் பல வருடங்களாக அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் அந்த உண்டியில் உள்ள பணத்தை எடுத்து சென்று விடுவார்கள்.


இந்நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் கண்ணகி அம்மன் கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருட்டு போகிறது.


சிறைச்சாலையில் திருடப்பட்ட சம்பவம் வெளியே தெரிவதற்குள் பணம் முன்பு இருந்த இடத்தில் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு காவலர் சுபாஷ் செல்வம் ஆளாக்கப்படுகிறார்.


வங்கியில் வேலைப் பார்க்கும் நாயகி வின்சு ராச்சே உதவியோடு கடன் பெற்று அந்த பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார்.


இந்த விஷயம் ஊருக்குள் தெரிந்து விட்டால் அந்த சிறைச்சாலைக்கு கெட்ட பெயர் கிடைப்பதுடன் ஊர் மக்கள் அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு விடுவோம் என்று நினைத்து முனிஷ்காந்தும் சுபாஷ் செல்வமும் உண்டியல் பணத்தை திருடிய திருடனை தேட ஆரம்பிக்கின்றனர்.


இதனையடுத்து வங்கியில் பெற்ற கடன் பணத்தை தன் வீட்டில் வைத்திருக்க அங்கேயும் உண்டியல் திருடன் பணத்தை எடுத்து விடுகிறான்,


இதே சமயம் சிறைச்சாலையில் இருந்த உண்டியல் பணம் காணாமல் போன தகவல் வெளியே தெரிய வருகிறது.


இறுதியில் அம்மன் கோவில் உண்டியல் பணத்தை திருடிய திருடன் யார் ? முனிஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வத்தின் பிடியில் உண்டியல் திருடன் சிக்கினானா? இல்லையா? என்பதுதான் 'காக்கி சர்க்கஸ்' இணைய த்தொடருடைய மீதிக்கதை.


ஜெயில் வார்டனாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் கண்டிப்பு மிக்க அதிகாரியாக இல்லாமல் இயல்பான நடிப்பால் கைதிகள் புத்தகம் பிடிப்பதன் மூலம் திருந்தி வாழ்வார்கள் என நினைக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.


சிறை காவலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வம் எதார்த்தமான நடித்திருக்கிறார். காதல், கடமை, ஆக்ஷன் என அனைத்திலும் குறிப்பாக கண் முன்னே திருடன் இருந்ததும் அவனை ஆதாரத்தோடு பிடிக்க எடுக்கும் முயற்சிகளில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.


திருடனாக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவனின் ஒவ்வொரு காட்சிகளும் நடிப்பில் ரசிக்க முடிகிறது.


கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ராச்சே

மற்றும் திருடன் காதலியாக நடித்திருக்கும் கெளதமி ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.


இயல்பாக இருக்கும் ஜெயில் வார்டனின் கதையுடன் கோவில் உண்டியல் திருட்டுடன் திருடன் - போலீஸ் இவர்களுக்கிடையே நடக்கும் போராட்டத்தை நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும்படி இணைய த் தொடரை இயக்கியுள்ளார் இயக்குநர் அமீன் பாரிப்.


ரேட்டிங் - 3. 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page